தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு அந்தக் கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கீழ்வேளூரில் வடிவேல் இராவணனும், அம்பத்தூரில் கே.என்.சேகரும், செஞ்சியில் கணேஷ்குமாரும் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எஞ்சிய 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சௌமியா, விருத்தாசலத்தில் தமிழரசி, சேலம் மேற்குத் தொகுதியில் கார்த்தி ஆகியோர் பாமக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். பெண்ணாகரத்தில் பாடி செல்வம், போளூரில் சி.ஆர்.பாஸ்கரன், திருப்போரூரில் வழக்கறிஞர் பாலு, ஜெயங்கொண்டத்தில் வைத்தி, சேலம் வடக்குத் தொகுதியில் சதாசிவம், விக்கிரவாண்டியில் சிவக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சோளிங்கரில் சரவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி, உத்திரமேரூரில் மகேஷ்குமார், ரிசிவந்தியத்தில் செழியன், காட்டுமன்னார்கோவிலில் அன்பு சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

