Advertisements

திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாகப் பரவி வரும் தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் அதிமுகவை விட்டு வெளியேறிய நிலையில், செங்கோட்டையன் வழியில் அவரும் தவெகவில் சென்று இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தைத் தங்கள் பக்கம் இழுத்தது.
தொடர்ந்து, சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், த.வெ.க. ஆட்சி அமைத்ததால், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டியதாகிவிட்டது. மேலும், திமுகவில் கடந்த பிப்ரவரி மாதமே ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், இதுவரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், தவெகவில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது இதனை மறுத்து, இது தவறான தகவல் என்று தெரிவித்துள்ளார்.
Advertisements




