சென்னை கோயம்பேட்டில் மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் அவரது நண்பர் சண்முகம். இவர்கள் இருவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் அப்பகுதியில் சிலருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர்..
அப்போது, சங்கர் மற்றும் சண்முகத்துடன் உடன் மருந்திய கும்பல் தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சங்கர் மற்றும் சண்முகத்தை பீர் பாட்டிலால் குத்தி கடுமையாக தாக்கினர். இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் இருந்த மார்க்கெட் ஊழியர்கள் அங்கு வந்தவுடன் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்..
இதன் பின்னர், மார்க்கெட் ஊழியர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்..


