
விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விலைமாது வுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உரையாடலை சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தெரிவித்துள்ள நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சர் பொன்முடிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். ஒரு மேடையில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, விலைமாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்று கேட்டு அதற்கு கீழ்த்தரமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது.
அதில் அவர் ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு பெண்கள் மத்தியிலும் திமுக கட்சிக்கு உள்ளேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் குறிப்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொன்முடியை திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்களே நேரடியாக நீக்கயுள்ளது கட்சிக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி பதவியில் இருந்து நீக்கயுள்ள பொன்முடி ,பொன்முடியின் இத்தகைய கருத்துக்கு பெண்கள் மத்தியில் தமிழக அரசியல் களத்திலும் எதிர்ப்பு வலுக்கும் பட்சத்தில் வனத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்படுமாக என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக அமைச்சர் பொன்முடி பெண்களை பற்றி அவதூறாக தெரிவித்த கருத்தால் கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடும் என்பதை கருத்தில்கொண்டு பொன்முடி மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
