tamilnadu rain:8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Advertisements

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றி நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்தது. அதிகாலையிலிருந்து பெய்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியூன சூழல் நிலவுகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டகளில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்தவரை இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *