Mexico : கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 64-பேர் பலி..!

Advertisements

மெக்சிகோவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்,  64-பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதமடைந்தன.

கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின. நிலச்சரிவில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், மெக்சிகோவில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *