
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணித் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் வருன்கிற 21 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதனைக் குறித்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்கப்படுகின்றது. எனவே இது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

