
தூத்துக்குடியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 32 ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
தூத்துக்குடியில் ‘டிஎன் ரைசிங் 2025’ தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 32 ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு கோடி ரூபாய் மதிப்பில் 49 ஆயிரத்து எட்டுநூற்று நாற்பத்தைந்து பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் விதமாக தொழில்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த மாநாட்டில் நெல்லை கங்கைகொண்டானில் 330 கோடி ரூபாயில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம், 200 கோடி ரூபாய் மதிப்பில் நந்தாதேவி பயோ எனர்ஜி நிறுவனம், காஞ்சிபுரத்தில் 700 கோடி ரூபாயில் இமேக் ஜெனோவேஸ் நிறுவனம் ஆகிவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழகம் மாறும் என்று தெரிவித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் நெல்லையில் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 469 பேருக்கான பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா,அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

