கவிதை படைத்த கவியரசர் கண்ணதாசனுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்.!

கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்த கவியரசர் கண்ணதாசனுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, கவியரசர் கண்ணதாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ். கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன்பாடல். பாமரர் நாவில் பழமொழியானது உன்பல்லவி மொழியின் சகல செளகரியங்களையும் பாட்டுக்குள் பரிமாறியவன் நீ என்று கூறினார். மேலும் கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா.

இந்த மண்ணும், கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா உன் தமிழைப் பிரிக்க முடியாதய்யா என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *