காவல்துறையை ஏவி மிரட்டலாமா? ஆவேசமான உதயநிதி ஸ்டாலின்.!

காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், அதனை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவின் ஜென்சி கூட்டத்தை நடத்திய அன்பானந்தன் அரியப்பனை, ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயன்றதைக் கண்டித்துள்ளார்.

இதே போல அண்மையில், ஜென்சி கூட்டத்தில் பேசிய கனி மீது தாக்குதல் நடத்திய த.வெ.கவினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சோபா மாடல் அரசின் போலிப் பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையில் எடுத்துள்ளளதாக விமர்சித்துள்ளார்.

காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், அதனை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உதயநிதி எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *