மக்களுக்குத் தொண்டு செய்வதுதான் தன்னுடைய நோக்கம் – நடிகர் KPY பாலா

அதிக அளவு சம்பாதித்து மக்களுக்குத் தொண்டு செய்வதுதான் தன்னுடைய நோக்கம் என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நடிகர் பாலா ஆகியோர் மைதானத்தைத் திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினர். இதன்பின்னர், நடிகர் பாலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இளைஞர்கள் அதிக அளவு திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே, நான் அவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு இல்லை. மாறாக அவர்களிடமிருந்து பல அறிவுரைகளை நான் பெறுகின்ற நிலையில் தான் உள்ளேன் என்று தெரிவித்தார். நடிகர் லாரன்ஸின் அரசியல் வருகைக் குறித்த கேள்விக்கு, அது அவருடைய வழி, தன் வழி அது அல்ல என்று பதிலளித்தார். அதிக அளவு சம்பாதித்து மக்களுக்குத் தொண்டு செய்வதுதான் தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *