லண்டனில் நடைபெறும் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி!

Advertisements

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக் கடைசி நாள் ஆட்டத்தில் இன்னும் 35 ரன்களே எடுக்க வேண்டியுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தில் பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார்.

ஒல்லி போப் 27 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதே நேரத்தில் அந்த அணி 4 விக்கெட்டுகளைக் கைவசம் வைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *