சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு – காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!

Advertisements
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கக் கிர்கிஸ்தானுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக உஸ்பெகிஸ்தானில் இருந்து கிர்கிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் பிஸ்கக்கில் நாளை நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
பிஸ்கக் நகரில் விடுதியில் தங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடியைப் பல்வேறு அமைப்பினரும் சந்தித்துப் பேசினர்.
அதன்பின் பிஸ்கக் நகரில் உள்ள மகாத்மா காந்தி மண்டபத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வந்திருந்த இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *