மோடி, ஜின்பிங், புடின் ஒரே மேடையில் – கையெழுத்தான முக்கிய தீர்மானம்!

கிர்கிஸ்தானின் பிஸ்கக் நகரில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுத் தீர்மானத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

முன்னாளைய சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கக்கில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

உறுப்பு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுக்கள் நடைபெற்றன. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்கள், பயங்கரவாதம் ஆகிய உலகளாவிய சிக்கல்களை அனைவரும் இணைந்து எதிர்கொள்வது குறித்து ஒருமித்த கருத்தைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் மாநாட்டுத் தீர்மானத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *