பயிர்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் – சென்னையில் பரபரப்பு!

பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரிச் சென்னை எழும்பூரில் விவசாயிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் முன் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்காக இருக்கைகளைக் கொண்டுவந்து பந்தல் அமைக்க முற்பட்டனர். இதற்குக் காவல்துறையினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *