‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ – மோடிக்குக் கௌரவம்!

Advertisements
ஸ்லோவாக்கியா நாட்டின் மிக உயர்ந்த கௌரவமான தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ் விருதைப் பெற்றதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்லோவாக்கியா நாட்டின், பர்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நேரந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ் விருதை ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லக்ரினி வழங்கி கௌரவித்தார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,  தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ் விருதைப் பெற்றதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். இந்த கௌரவத்தை வழங்கிய ஸ்லோவாக்கிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த அங்கீகாரம் 140 கோடி இந்திய மக்களுக்கும் சொந்தமானது.
இந்த விருதை இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையேயான என்றும் நிலைத்திருக்கும் நட்புறவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *