India vs Srilanka : மகளிர் கிரிக்கெட் மூன்றாவது இருபது ஓவர் போட்டி.!

இந்தியா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதன், முதல், இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இருபது ஓவர் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இதில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்திலும், இலங்கை அணி தொடரை இழக்காமல் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *