
பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக பிரபல அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார். 39 வயதான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும், 2014 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்காக 125 கோல்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2 முறை உலகக்கோப்பை சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். இது குறித்து பேசிய மெஸ்ஸி, பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கால்பந்து வாய்ப்புகாக பல தகுதியான, திறமையான இளம் வீரர்கள் பலர் காத்திருப்பதாகக் கூறினார். இதுவே தனது ஒய்வு அறிவிப்புக்கு சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.




