
சிலம்பரசன் நடிக்கும் அரசன் படப்பிடிப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மதுரையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது. இதை தொடர்ந்து, மதுரை டைகர் எனப் பெயரிடப்பட்ட பனியனை சிம்பு அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.இப்படமானது வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகிறது. இதை யடுத்து, முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கலாம் எனக் கூறப்படுகிறது.



