குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம் – த.வெ.க-வை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடந்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம் என்று விமர்சித்தார்.
மேலும், பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது, அமமுக உறுப்பினரையும் கொசுறு வாங்குவது, அதிமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது, இதுபோன்ற கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா என்று வினவினார்.
தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், தற்போது துயரசக்தியாக அம்பலப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்தபடியே இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *