ஆஷஸ் போட்டியில் ஸ்டார்க்கின் வேகத்தில் இங்கிலாந்து சரிந்தது!

Advertisements

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்டார்க் பந்து வீச்சு வேகத்தில் சரிந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த, தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறிய நிலையில், 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

இதில், நான்கு பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *