ஹார்முஸ் வழியாகச் செல்லும் சரக்குகளுக்கு புதிய கட்டணம் – அமெரிக்கா அறிவிப்பு.!

 ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, மேலும் ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் ‘ஈரானிய முற்றுகையை’ மீண்டும் நடைமுறைப்படுத்துகிறோம் என்றும், மற்ற அனைத்து நாடுகளும் இந்த நீரிணையை நியாயமான முறையிலும் தடையின்றியும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இனிவரும் காலங்களில், ‘ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலன்’ என்று அறியப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில், நியாயமான நடைமுறையின் அடிப்படையில் உலகின் மிகவும் பதற்றமான இப்பகுதிக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிக்காக ஆகும் அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படும் என்று கூறினார்.
இதற்காக, இப்பகுதி வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான செயல்முறைகளும் ஏற்பாடுகளும் உடனடியாகத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *