எல்.பி.ஜி-யை விடக் குறைந்த செலவு – அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி!

மக்கள் அனைவரும் எத்தனால் அடுப்புக்கு மாற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, எல்.பி.ஜி எரிவாயுவை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய எரிவாயு அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில், 7 சதவீதம் தண்ணீரை எத்தனாலுடன் கலந்து உங்களால் அடுப்பை எரிக்க முடியும். இது சாதாரண எல்பிஜி எரிவாயு போன்றே எரியும். வணிகரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை விட இது மிகவும் மலிவானது என்று தெரிவித்தார்.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே எத்தனால் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். வாகனங்களுக்கு அடுத்தபடியாக, தற்போது இந்த எத்தனால் பயன்பாட்டை இந்திய சமையலறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *