Advertisements

செறிவூட்டப்பட்ட யுரேனியம் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், செறிவூட்டப்பட்ட யுரேனியம் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இல்லையென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் ஒருங்கிணைந்து, அது இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறொரு மாற்று இடத்தில் அது அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தச் செயல் முறைக்கும் நிகழ்வுக்கும் அணுசக்தி ஆணையமோ அல்லது அதற்கு இணையான அமைப்போ சாட்சியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Advertisements



