
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றியத் தலைவர் செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், செந்தில் தனது தேநீர்க்கடையைத் திறக்கச் சென்ற போது, அங்குப் போதையில் இருந்தவர்கள் அவரைக் கொடூரமாகத் தாக்கிப் கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் எந்தவிதக் குற்றத்தைச் செய்வதற்கும் குற்றவாளிகளுக்குப் பயம் என்பது துளி கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த செந்தில் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
செந்தில் படுகொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


