
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக, அக்டோபர் 2-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று சென்னை நுங்கம்பாக்கத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, 1999-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மாஞ்சோலை உட்பட 5 லட்சம் தேயிலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக பலர் உயிரிழந்தனர்.
அவர்கள் நினைவாக நினைவு அஞ்சலியை, நாளை எனது தலைமையில் நடத்த உள்ளோம் எனவும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சிவப்பு பச்சை உடை அணிந்து பேரணி 3 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது என்றும், அதனை தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் நெல்லையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும், கூடலூர், நீலகிரி மாவட்டத்தில், தேயிலை தோட்டத்தை வனப்பகுதியாக மாற்றுகிறோம் என கூறுவது ஏற்க முடியாது என்றும், இவற்றிற்கெல்லாம் தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பல முறை போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும், முதலமைச்சர் ஜோசப்விஜய் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனவும், 717- டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ள நிலையில், முழுமையாக மூடப்படாமல், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தான் சரியானது எனவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அக்டோபர் 2-ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம் எனவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


