NEET AGAINST PROTEST : கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை.!

Advertisements

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது. இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்னர். போராட்டம் நடத்திய மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது. போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை.

திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.”ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.

“ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி டெல்லி காவலர்களுக்கு எதிராக தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *