மக்களவையில் கடும் அமளி..!

Advertisements

எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் மாறி மாறிக் கூச்சலிட்டதால் நாடாளுமன்றத்தின் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியைப் பேச விடாமல் தடுப்பதைக் கண்டித்துக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இதையடுத்துக் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவைத் தலைவர் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் அவை திங்கட்கிழமை முற்பகல் பதினொரு மணிக்குக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பாஜக அரசு அவர்களுக்கு விருப்பமானதைச் செய்துகொள்வதாகக் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *