முதல்வர் விஜய் குறித்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு..!

தமிழ்நாட்டில் உள்ள புதிய அரசிற்கு, கால அவகாசம் தர வேண்டும் என்று கோவையில், துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு, தமிழக ஆளுநர் அர்லேகர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரசவ தாய்மார்களுக்கு, முழுமையான வைத்தியத்தை தந்த முதல் மருத்துவமனை குப்புசாமி மருத்துவமனை அதன் நர்சங் கல்லூரி திறப்பிற்கு வருகை புரிந்துள்ளேன் என்றும், கோவைக்கு வருவது என்றாலும் தமிழகத்திற்கு வருவது என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

மேலும். டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர். அது அரசியல் கேள்வி, அதற்குரிய பதிலை அரசியல் தலைவர்கள் அளிப்பார்கள் என்றும், மாணவர்கள் எப்போதும், தேசத்தின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஒற்றுமையாக இருந்தால் தான் உலக அரங்கில் நம்முடைய குரல் ஒலிக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *