‘அமரன்’ படத் தியேட்டரில் குண்டு வீச்சு !

Advertisements

திருநெல்வேலி:

‘அமரன்’ படம் திரையிடப்பட்ட அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியையொட்டி வெளியானது. இந்தப் படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற போதிலும் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி விட்டார்கள், மேஜர் முகுந்தின் சாதியை வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. படம் வெளியான சமயத்தில் இந்தச் சர்ச்சைகளால் சில திரையரங்குகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ’அமரன்’ படம் திரையிடப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் மூன்று பேர் திரையரங்க வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கும் எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல். இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *