Advertisements

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் சுற்றுலா படகுகளின் எண்ணிக்கை கூடுதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக குவிந்து வருவதால், வருகின்ற சுற்றுலா பயணிகள் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டுபாலம் ஆகியவற்றைக் காண மிகுந்த ஆர்வத்துடன் சுற்றுலா படங்களில் பயணம் செய்கின்றனர்.
பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய மூன்று சுற்றுலா படகுகள் சுற்றுலா பயணி வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் படகுகளில் செல்ல காத்து நிற்பதால் கூடுதல் வசதியாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு கூடுதலான படகுகளும் சேர்ந்து ஐந்து படகுகள் இன்று முதல் இயக்கப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கால தாமதத்தை மிச்சப்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள இந்த வசதி சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது.
Advertisements



