நத்தம் புறம்போக்கு நிலங்கள் – பட்டா வழங்க அரசு திட்டம்!

Advertisements

நத்தம் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்குவதற்கான நடைமுறை மாற்றங்களை உருவாக்கி வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில், நலிவடைந்த கோவில்களுக்குப் பூசைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், நத்தம் புறம்போக்கு நிலங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருப்போருக்குப் பட்டா வழங்கப்படும் என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதன்படி நத்தம் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள் பற்றிய ஆய்வுப் பணிகளைச் செய்து வருவதாகவும், விரைந்து பட்டாக்கள் வழங்குவதற்காகப் புதிய நடைமுறை மாற்றங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
அனிதா இராதாகிருஷ்ணன் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன் மனநிலையை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *