கார்ப்பரேட் நிறுவனமா அதிமுக? – எடப்பாடியை சாடிய செங்கோட்டையன்!

அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருவாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  தமிழக வெற்றி கழகத்தில் இணைய யார் வற்புறுத்தினார்கள் என்பதை தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

 

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியோ அதனை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இதன் காரணமாகவே அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறி வருவதாகத் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *