வெற்றிமாறனின் ‘மனுஷி’ படத்தை பார்க்கும் உயர்நீதிமன்ற நீதிபதி!

Advertisements

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், வரும் 24 ஆம் தேதி படத்தை பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களைத் தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கக் கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகஸ்ட் 24 ஆம் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் மனுஷி படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *