“பண்பில் சிறந்த விஜய்” .. அரசியலில் கவனம் ஈர்க்கும் வைகோவின் பேச்சு.!

முதலமைச்சர் ஜோசப்விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சர் ஜோசப்விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற விஜய்யை, வாசலுக்கே வந்து துரை வைகோ வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்கு வந்த விஜய்யை பொன்னாடை போர்த்தி வைகோ வரவேற்றார்.

அதன் பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு, கார் வரை வந்து விஜய்யை, வைகோ வழியனுப்பி வைத்தார். அப்போது பேசிய ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, விஜய்யின் பண்பாடு என்னை வியக்க வைத்தது என்றும், உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன் என விஜய் என்னிடம் தெரிவித்தார் என்றும், விஜய்க்கு அறிவுரை அல்ல, வாழ்த்து கூறினேன், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம்தான் இந்த தேர்தல் முடிவு என்றும் மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பேன் என்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அதற்கு வாழ்த்துகள் எனவும், அதை அப்படியே தொடருங்கள் என கூறினேன என்றும், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பா.ம.க. தலைவர் அன்புணி, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரையும், முதலமைச்சர் சி.ஜோசப்விஜய் சந்தித்து உரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *