சூர்யாவிற்குப் பெரிய வெற்றியைப் பரிசளித்த பாலாஜி – மிஷ்கின் பாராட்டு!

Advertisements

‘கருப்பு’ படத்திற்காக சூர்யாவிற்கு கிடைத்த வெற்றியை பார்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என பிரபல இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மிஷ்கின், நடிகர் சூர்யாவின் கருப்பு படம் குறித்தும் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படம் குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ‘கருப்பு’ படத்திற்காக சூர்யாவிற்கு கிடைத்த வெற்றியை பார்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். சமீபகாலமாக நடிகர் சூர்யா  சில பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் பாலாஜி அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருப்பதைக் கண்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். வெற்றிமாறன் தன்னிடம் விவரித்த ‘வாடிவாசல்’ கதை மிக அற்புதமாக இருந்தது என்றும் அது சூர்யாவிற்கு எல்லா காலத்திற்குமான ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *