அமெரிக்காவுடன் அண்டை நாடுகள் இணைந்து செயல்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதற்கிடையே ஈரான் அரசு, தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா எடுத்து வரும் பொருளாதார ரீதியிலான தாக்குதல்களில் அண்டை நாடுகள் இணைந்தால் அவர்களும் எதிரி நாடுகளாக கருத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

