
காரைக்காலில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வர கோவில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள, தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக செண்பக தியாகராஜர் யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் விநாயகர், சுப்ரமணியர், செண்பக தியாகராஜர் உள்ளிட்ட தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் , புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



