உடன்பாடின்றி முடிந்த ஐ.நா. மாநாடு!

பருவக்கால மாற்றத்தைச் சமாளிப்பதற்கான புதிய உடன்பாட்டை உருவாக்குவதற்கான பேச்சு, உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டால் எந்த முடிவையும் எட்டாமல் நிறைவடைந்தது.

புவி வெப்பமாதல், பருவக்கால மாற்றம், சுற்றுச்சூழல் ஆகியன குறித்து   ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாடு துருக்கியில் நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேச்சு நடத்தினர். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகிய புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது, இதற்கான நிதிப் பங்களிப்பு ஆகியன குறித்து விரிவான பேச்சு நடைபெற்றது.

புவி வெப்பமாதலுக்குக் காரணம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே என்று மெய்ப்பிக்கும் வகையில் புதிய உடன்பாட்டில் அதைக் குறிப்பிடத் தவறியதாகக் கூறப்படுகிறது. பணக்கார நாடுகள் நிதியுதவி வழங்காவிட்டால் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி எந்த உறுதியும் அளிக்க முடியாது என்று ஏழை நாடுகள் கூறிவிட்டன.
இதனால் புதிய உடன்பாட்டை உருவாக்குவதில் எந்த முடிவும் எட்டாமல் பேச்சு நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *