ஏழு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.!

Advertisements

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைப் பெய்தது. இதில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தேனி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தொடர்ந்து, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *