“நயன்தாராவுடன் நடிப்பேன்னு கனவுலயும் நினைக்கல!” – நெகிழ்ச்சியுடன் கவின்.!

நடிகை நயன்தாரவுடன் நடிப்பேன் என தான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கவின், ‘லிப்ட்’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’, ‘டாடா’, ‘ப்ளடி பெக்கர்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, ‘ஹாய்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கவின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நடிகை நயன்தாரவுடன் நடிப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார். நயன் தாரா உடன் நடிப்பது என்பது தனது பக்கெட் லிஸ்ட்டில் கூட இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *