Zafar Sadiq:நீதிமன்ற காவல் ஆக.23ம் தேதிவரை நீட்டிப்பு!

Advertisements

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.

பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கப்பட்ட நிலையில், அவரை வரும் ஜூலை 29ஆம் தேதிவரை

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 23ம் தேதிவரை நீட்டித்துச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *