நள்ளிரவில் நடுக்கடலில் அதிரடி..!

எண்ணெய்க் கப்பல்களைக் கடத்தும் பன்னாட்டுக் கடற்கொள்ளைக் கும்பலை இந்திய கடலோரக் காவல்படையினர் பிடித்துள்ளனர்.

இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிப்ரவரி 5, 6 ஆகிய நாட்களின் இரவில், கடற்கொள்ளையர்கள் சட்டவிரோதமான எண்ணெய்யைப் பரிமாற்றும் முயற்சியைக் கடல்வழியாகவும் வான்வழியாகவும் சென்ற கடலோரக் காவல்படையினர் முறியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மும்பைக்கு மேற்கே நூறு கடல்மைல் தொலைவில் சந்தேகத்துக்கிடமான மூன்று கப்பல்களைக் கடலோரக் காவல்படை இடைமறித்து விசாரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.கடற்கொள்ளையர்கள் சட்டவிரோதமாகக் கடத்தி வரும் எண்ணெய்யைக் குறைந்த விலையில் விற்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை முறியடித்ததாகவும், பிடிபட்ட படகுகளை விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *