ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்க ஈரான் சதிவேலை : அமெரிக்கா குற்றச்சாட்டு.!

Advertisements

ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கும் வகையில், ஈரான் செயல்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை தொடர்ந்து தாக்கி வந்தது. இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையிலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி ஏவப்பட்ட 4 ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு படை அதன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், இந்த பிராந்தியத்தில் கடல்சார் போக்குவரத்தில் உடனடி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த டிரோன்கள் இருந்தன என தெரிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அடங்கிய சரக்கு கப்பல்களின் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கும் வகையில், ஈரான் செயல்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *