தமிழை மரமாக வளர்த்தவர் பாவாணர்..!

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளையொட்டி அவர் புகழ் வாழ்க என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில், “தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியைப் பாவாணர் மதிப்பிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் புகழ் வாழ்க என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *