
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
முக்கிய தலைவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருவது அ.தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட இணைப்பு விழா அடுத்த வாரம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




