தமிழ்நாட்டில் திராவிடச் சித்தாந்தக் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும் – விஜய பிரபாகரன்

Advertisements

தமிழ்நாட்டில் திராவிடச் சித்தாந்தக் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும் என்று தே.மு.தி.க. இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பாலையில் தே.மு.தி.க. பிரமுகர் இல்லக் காதணி விழாவில் தே.மு.தி.க. இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்துக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

ஜனவரி 9ஆம் நாள் கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தே.மு.தி.கவை. வலுப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா தலைமையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று  விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *