
திமுக தயவில் தான் தற்போதைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆளுங்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் நிலையிலும் நம்மை தேடி மாற்றுக்கட்சியனர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
தொண்டனாக இருந்தாலும் தலைவனாக இருந்தாலும் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகமே முக்கியம் என நினைத்தவர் கலைஞர் என்று கூறினார்.
வெற்றிக்காக வெறிகொண்டு எப்போதும் திமுகவினர் அலைந்தது இல்லை என்றும் ஆட்சி பறிபோகும் என தெரிந்தே அவசரநிலையை எதிர்த்தது திமுக என்றும் குறிப்பிட்டார். திமுக தயவில் தான் தற்போதைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.



