Mettur Water Level : குறுவை சாகுபடி பாதிப்பு – அன்புமணி வலியுறுத்தல்..!

Advertisements

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலையில், உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளளார். அதில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையாலும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

தற்போது மேட்டூர் அணையில் 41.60 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்குத் தேவையான அளவு நீர் இல்லை. இதனால் குறுவை சாகுபடி பரப்பு கடுமையாக குறையக்கூடும் என்பதால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை மானியத்தில் வழங்குவதுடன், 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் மற்றும் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *