செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட டிரம்ப்..!

Advertisements

பாரக் ஒபாமா, அவர் மனைவி மிச்சல் ஆகியோரை மனிதக் குரங்காகச் சித்தரித்து டுரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுரூத் சமூக வலைத்தளத்தில் ஒரு நிமிட வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தேர்தல் மோசடி நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, அவர் மனைவி மிச்சல் ஒபாமா ஆகியோரை மனிதக் குரங்கு போல் சித்தரித்திருந்தார்.

இனவெறி காரணமாக டிரம்ப் இவ்வாறு பதிவிட்டுள்ளதாகக் கூறிச் சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வீடியோவை டிரம்ப் நீக்கி விட்டார். அத்துடன் தனது இந்தச் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். தான் இத்தகைய தவறைச் செய்திருக்கக் கூடாது என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். தனது அலுவலர் பதிவிட்ட இந்த வீடியோவின் தொடக்கத்தை மட்டுமே தான் பார்த்ததாகவும், அதில் ஒபாமாவை இழிவுபடுத்தியுள்ளது தனக்குத் தெரியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *